November 29, 2022

தேசிய அளவிலான கேரம் போட்டியில் சேலம் மாணவி சாதனை

சேலம், நவ.19

புது தில்லியில் தேசிய அளவிலான 50வது சீனியர் கேரம் சாம்பியன் ´ப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழக அணி சார்பில் சேலம் மாவட்ட வாழப்பாடி அருகே உள்ள குமாரபாளையம் பகுதியை சேர்ந்த லட்சுமணண்-சிந்து தம்பதிகளின் மூத்த மகளும், பேளூர் ஸ்ரீ சக்திவிகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் +2 மாணவியுமான ராஜேஸ்வரி கலந்து கொண்டார். இவர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பள்ளி நிர்வாகி தலைவர் சந்திரசேகர் செயலாளர் விஜயகுமார், தாளாளர் பிரபு, உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வாழ்பபாடி அரிமா சங்கம், பேளூர் சக்தி விகாஸ் பள்ளி மற்றும் வாழ்பபாடி சுற்றியுள்ள கிராம மக்கள் சார்பில் வாழப்பாடி பஸ் நிலையம் அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் சேலம் மாவட்ட கேரம் விளையாட்டு சங்க செயலாளர் டேனியல், அரிமா சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், தேவராஜன், எஸ்.செந்தில்குமார் மற்றும் சக்திவிகாஸ் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் ஆகியோர் மாணவி ராஜேஸ்வரியை பாராட்டினர்.

Spread the love