February 3, 2023

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில்
ரூ.238.90 கோடி மதிப்பீட்டில்
முடிவுற்ற திட்டப் பணிகளை
முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தென்காசி, டிச.8

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.34.14 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முதல்வராக பதவியேற்றப் பிறகு முதன்முறையாக ஸ்டாலின் 7.12.2022 இரவு சென்னையிலிருந்து தென்காசிக்கு ரயில் மூலம் பயணம் மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக (8.12.2022) சென்றடைந்த முதல்வருக்கு தென்காசி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்றைய தினம் தென்காசியில் நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் முதல்வர், இம்மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் விவரங்கள்:

4 கோடியே 25 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலவில் மருதம்புத்தூர், வேலாயுதபுரம், இலத்தூர், விஸ்வநாதபேரி, குத்துக்கல் வலசை ஆகிய கிராமங்களில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள், வலங்கைப்பலிசமுத்திரம், கரைகண்டார்குளம், களப்பாகுளம், அரியநாயகிபுரம், வீரிருப்பு, மைலப்பபுரம், ஐந்தான்கட்டளை, தேவிப்பட்டிணம், கூடலூர், சங்கனாப்பேரி, ஆகிய கிராமங்களில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்கள். தென்காசி ஒன்றியம், திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள உணவுதானியக் கிடங்கு, ஆலங்குளம் ஒன்றியம், ஓடைமறிச்சான் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கக் கட்டடம், மேலநீலிதநல்லூர் ஊளராட் சி, கோ-மருதப்பபுரம் மற்றும் குலசேகரமங்கலம் ஆகிய கிராமங்களில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

குருவிகுளம் ஒன்றியம், பழங்கோட்டை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கலையரங்கக் கட்டடம், வாசுதேவநல்லூர் ஒன்றியம், நெற்கட்டும்செவல் ஊராட்சி, பச்சேரியில் கட்டப்பட்டுள்ள 45 பசுமை வீடுகள், கடையநல்லூர் ஒன்றியம், நெடுவயல் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகம், வாசுதேவநல்லூர் ஒன்றியம், முள்ளிகுளம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, செங்கோட்டை ஒன்றியம் சீவநல்லூர், திருவெற்றியூரில் பயணிகள் நிழற்குடை; வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செங்கோட்டையில் 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மண்பரிசோதனைக்கூடம்; வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ஊத்துமலை, வீரகேரளம்புதூர், ஆழ்வார்குறிச்சி ஆகிய இடங்களில் 1 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையங்களை திறந்து வைத்தார்.

மேலும், வல்லத்தில் 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலைய புற நோயாளிகள் பகுதி, கம்பனேரி மற்றும் மடத்துப்பட்டி பகுதிகளில் 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்கள், ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள செவிலியர் குடியிருப்பு; செவல்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறைகள், ஆய்வகம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான கழிப்பறைகள்; தென்காசி நகராட்சியில் 50 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா மற்றும் மங்கம்மாள் சாலை பகுதியில் சுகாதார நல மையம், சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் 3 கோடியே 16 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கசடு கழிவு மேலாண்மை மையம், கடையநல்லூர் நகராட்சியில் 1 கோடியே 16 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் குமந்தாபுரம் மற்றும் மேலக்கடையநல்லூர் பகுதிகளில் நகர்புற நல மையம், அண்ணாமலை பொய்கை மேம்படுத்தும் பணி, திருமால் விழுங்கி ஊரணி மேம்படுத்தும் பணிகள்; பொதுப்பணித் துறை கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு சார்பில் அ.கரிசல்குளம், பழங்கோட்டை, மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய கிராமங்களில் 63 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

தலைவன்கோட்டை, சங்கரன்கோவில் மற்றும் கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 52 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படு த்தப்பட்ட சித்த மருத்துவ பிரிவுகள், சங்கரன்கோவில் நடுவக்குறிச்சியில் 3 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவிகளுக்கான விடுதி; வனத்துறை சார்பில் புளியங்குடி தலையணை வனப்பகுதியில் வனத்தீ ஏற்படாமல் தடுக்க 3 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பணை; மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடையநல்லூர் நகராட்சியில் 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் விற்பனை அங்காடி; சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் மத்தளம்பாறை, ஐந்தாம் கட்டளை மற்றும் நடுவக்குறிச்சி ஆகிய கிராமங்களில் 32 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மையக் கட்டடங்களை திறந்து வைத்தார்.

மேலும், காரிசாத்தன், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் 2 கோடியே 1 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில் அரசு ஆதிதிராவிடர் நல நவீன சமுதாயக்கூடங்கள்; என மொத்தம் 22 கோடியே 20 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 57 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைத்தார். மேலும், இவ்விழாவில் மொத்தம் 34 கோடியே 14 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 1,03,508பயனாளிகளுக்கு 182 கோடியே 56 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.

Spread the love