October 3, 2022

தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை
ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நாமக்கல், செப்.22

நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி-2022 பண்டிகையை முன்னிட்டு 30 சத சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தொடங்கி வைத்தார்.

இந்தாண்டு தீபாவளி 2022-ல் புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டுப் புடவைகள், சேலம் பட்டுப் புடவைகள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய மென் பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன. மேலும் கோவை, மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும் மற்றும் களம்காரி காட்டன் புடவைகள் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி ரகங்களான ஏப்ரான், குல்ட் மெத்தைகள், கையுறைகள், டேபுள் மேட், ஸ்கிரின் துணிகள், தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் மற்றும் இலவம்பஞ்சு மெத்தைகள், தலையணைகள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளி 2022 பண்டிகைக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1 விற்பனை நிலையங்களுக்கு ரூ.100.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி 2022 சிறப்பு தள்ளுபடியாக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வசதியில் 30மூ வரையிலான தள்ளுபடி வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட அன்புடன் கோ-ஆப்டெக்ஸ் கேட்டுக்கொள்கிறது.

Spread the love