January 25, 2023

தில்லி ஆட்டோ எக்ஸ்போவில் 4 அதிநவீன மின்சார பேருந்துகளை அறிமுகம் செய்தது ஜேபிஎம்

புது தில்லி, ஜன.19

ஜேபிஎம் மின்சார பேருந்து நிறுவனம், ஆட்டோ எக்ஸ்போவில், 4 அதிநவீன மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியாவில், 12 மாநிலங்களில் 1,000த்திற்கு மேற்பட்ட ஜேபிஎம் பேருந்துகள் இயங்கி வரும் நிலையில், 10 கோடிக்கும் மேற்பட்ட பயணியர் பயனடைந்துள்ளதாகவும், மொத்தம் 5 கோடி கிலோ மீட்டர்கள் பயணித்துள்ளதாகவும் ஜேபிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், கேலக்ஸி சொகுசு பேருந்து டிசைன், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகிய அனைத்திலும் நேர்த்தி உடையதாக இந்த பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. சைடு இம்பாக்ட் மற்றும் ரோலோவர் பாதுகாப்பு, ஏபிஎஸ் உடன் கூடிய இபிஎஸ் அமைப்பு உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு வசதிகள் கொண்ட பேருந்தாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஜேபிஎம் நிறுவன துணைத் தலைவர் நிஷாந்த் ஆர்யா தெரிவித்துள்ளதாவது: தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பேருந்துகள், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் நிலைத்தன்மை, பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் லாபம் ஆகிய அனைத்தையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அடுத்த சில ஆண்டுகளில் இந்த வகை பேருந்துகள், சிறப்பான வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும். அதனால், இதற்கான முதலீடுகளைச் செய்து, தற்போது இருக்கும் தயாரிப்பு ஆலையை மேம்படுத்துவது மட்டுமின்றி, தேவைக்கேற்ப புதிய ஆலைகளை திறக்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love