October 4, 2022

திருவிதாங்கூர் தேவசம் போர்டு – டிசிஎஸ் இடையே கூட்டு

திருவனந்தபுரம், செப்.16

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனத்துக்கான இணைய முன் பதிவு வசதியை மேற்கொள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு டிசிஎஸ்., நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரையிலும் சபரிமலையில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இணைய முன்பதிவு வசதி இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கேரள போலீஸாருக்கு டாடா நிறுவனம் (டிசிஎஸ்) வழங்கிய மென்பொருளை தேவசம் போர்டு ஏற்று நடத்துவது என்று தீர்மானித்துள்ளது. இதையடுத்து, டிசிஎஸ் மூத்த மேலாளர் எஸ்.கே.நாயருடன், தேவசம் போர்டு தலைவர் கே.அனந்தகோபன், ஆணையர் பி.எஸ்.பிரகாஷ் ஆகியோர் அண்மையில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். இதற்காக தேவசம் போர்டில் உள்ள கணிப்பொறி அறிந்த அலுவலர்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சிஅளிக்கப்படவுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சபரிமலை மண்டல பூஜைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தரமான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட சிறந்த அடிப்படை வசதிகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Spread the love