November 29, 2022

திருவண்ணாமலை மஹா தீபத்தன்று மலையேற
2,500 பக்தர்களுக்கு அனுமதி: ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை, நவ.16

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா தீபத்தன்று, நீதிமன்ற உத்தரவுபடி, 2,500 பக்தர்கள் மட்டும் மலை மீதேறி சென்று, மஹா தீபம் காண அனுமதிக்கப்படுவர்,” என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார் திருவண்ணாமலையில், தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் அமைச்சர்கள் சேகர்பாபு, வேலு ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில், ஆட்சியர் கலந்து கொண்டு தெரிவித்துள்ளதாவது:

வரும், 27ல் அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிச.6ல் கோவில் சுவாமி சன்னிதியில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதைக்காண, 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மஹா தீபத்தை காண மலை மீதேற, உயர்நீதிமன்ற உத்தரவுபடி, 2,500 பக்தர்கள் முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love