October 2, 2022

திருச்செங்கோடு பதற்றமான வாக்குச்சாவடிகளை
தேர்தல் பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்

நாமக்கல், பிப்.9

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட அண்ணா பூங்கா நகராட்சி தொடக்கப்பள்ளி, காந்தி நகர் குமரன் கல்வி நிலையம், நெசவாளர் காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி, சட்டையம்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, சூரியம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, சாணார்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைந்துள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை நகர்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளரும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு, அதற்கான காரணங்கள் குறித்து காவல்துறை மற்றும் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம், கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். வாக்குப்பதிவின்போது கண்காணிப்பு பணிகளுக்காக நுண்பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். இந்த வாக்குச்சாவடிகள் கேமராக்கள் மூலம் இணைய வழியில் கண்காணிக்கப்பட வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போதிய வெளிச்சம் இல்லாத இடங்களில் மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகளான‌ குடிநீர்இ கழிப்பறைகள்இ சாய்வுதள வசதிகள் உள்ளிட்டவைகளை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறையினை நகர்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளரும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Spread the love