October 4, 2022

திங்க்பேட் எக்ஸ்1 ஃபோல்ட் லேப்டாப்
லெனோவா நிறுவனம் அறிமுகம்

சென்னை, செப்.2

லெனோவா நிறுவனம் புதிய திங்க்பேட் எக்ஸ்1 ஃபோல்ட் எனும் லேப்டாப் மாடலை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களாவது:

இந்த லேப்டாப் மாடல் ஆனது 16.3-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2,024×2,560 பிக்சல்ஸ், 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், டால்பி விசன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடலை மடிக்கும்போது டிஸ்பிளே அளவு 12 அங்குலமாக குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் டிஸ்பிளே பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லெனோவா நிறுவனம்.

12வது ஜெனரல் இன்டெல் கோர் யு9 ஐ5 மற்றும் ஐ7 பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. 32ஜிபி எல்பிடிடிஆர்5 ரேம் மற்றும் 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் வீடியோ கான்பரன்ஸிங்கிற்கு தகுந்த 5எம்பி ஐஆர் வெப் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. வைஃபை 6இ, புளூடூத் 5.2, தண்டர்போல்ட் 4 போர்ட், யுஎஸ்பி டைப்-சி 3.2 ஜென் 2 போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது.

லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 ஃபோல்ட் லேப்டாப் மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ.1,98,600 ஆக உள்ளது. அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சாதனம் விரைவில் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love