October 4, 2022

தரமான சிப்செட் வசதியுடன் களமிறங்கும்
இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போன்

சென்னை, செப்.19

இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆன்லைனில்கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்களாவது:

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 போனின் மாடல் எண் எக்ஸ்இ6815சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் மீடியா டெக் டைமண்சிட்டி சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஜீரோ ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் அமோல்ட் டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனில் 4700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் சிறப்பான அம்சம் என்னவென்றால் அது பாஸ்ட் சார்ஜிங் வசதி தான். அதாவது இந்த போன் 180 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. 200எம்பி கேமரா உட்பட ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

Spread the love