October 4, 2022

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பங்குகளுக்கு 2.86 மடங்கு விண்ணப்பம்: என்எஸ்சி தகவல்

சென்னை, செப்.9

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் பொதுப் பங்கு வெளியீட்டில், ஒதுக்கீடு செய்யப்பட்டதைப் போல் 2.86 மடங்கு பங்குகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கின் பொதுப் பங்கு வெளியீடு அண்மையில் நிறைவடைந்தது. மொத்தம் ரூ.831.6 கோடி மதிப்பிலான 87,12,000 பங்குகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இறுதி நாளான கடந்த புதன்கிழமை 2,49,39,292 பங்குகளை வாங்குவதற்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததைப் போல் 2.86 மடங்கு பங்குகள் கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தன.

அந்தப் பங்குகளை வாங்குவதற்காக தனிநபர் சில்லரை முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த பங்குகளைப் போல் 6.48 மடங்கும் அமைப்பு சாரா முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த பங்குகளைப் போல் 2.94 மடங்கும் பங்குகள் கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. தகுதிவாய்ந்த அமைப்பு முதலீட்டாளா?களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததைப் போல் 1.62 மடங்கு பங்குகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது என்று என்எஸ்இ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி, எந்த ஒரு தனிநபரையோ, குழுமத்தையோ சார்ந்து இயங்கவில்லை. இதில் 22,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் உள்ளனர். வங்கியின் 23.2 சதப் பங்குகள் எஃப்ஐஐ எனப்படும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வசம் உள்ளன. வங்கியின் நிகர வாராக்கடன் 0.9 சதமாகவும், மொத்த வாராக்கடன் 1.65 சதமாகவும் இருப்பது மிகவும் சாதகமான அம்சமாகும். மொத்தம் 509 கிளைகளுடன் செயல்படும் இந்த வங்கிக்கு தமிழ்நாட்டில் மட்டும் 369 கிளைகள் உள்ளன.

Spread the love