September 27, 2022

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில்
முத்ரா கடன் திட்டம் மூலம் 26,750 பயனாளிகளுக்கு
ரூ.1000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது: எஸ்பிஐ

சென்னை, செப்.22

“பிரதமரின் முத்ரா கடன் திட்டம் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 26,750 பயனாளிகளுக்கு ரூ.1000 கோடி கடனாக வழங்கியுள்¼ளாம் என்று எஸ்பிஐ தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து எஸ்பிஐ வங்கியின் தமிழ்நாடு, புதுச்சேரி வட்ட தலைமை பொது மேலாளர் ரா.ராதாகிருஷ்ணா தெரிவித்துள்ளதாவது: எஸ்பிஐக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 1,247 வங்கி கிளைகள், 2,389 வாடிக்கையாளர் சேவை மையங்கள் உள்ளன. மக்களுக்கு எஸ்பிஐ நேரடியாக வழங்கும் சேவைகள் தவிர மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் எஸ்பிஐ முக்கிய பங்கு வகிக்கிறது.

பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் தருகிறாம். 2021-22 நிதியாண்டியில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 26 ஆயிரத்து 750 பேருக்கு ரூ.1034.66 கோடி கடனாக வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டிலும் ஆகஸ்ட் மாதம் வரை 9,851 பேருக்கு ரூ.866.57 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து இரவு நேர விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறோம் என்றார்.

Spread the love