December 9, 2022

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் புதிய வழிகாட்டு
நெறிமுறைகள் தொடர்பான விளக்க அறிமுக கூட்டம்

விருதுநகர், நவ.8

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பாக மாவட்ட அலுவலர்கள் மற்றும் சுற்றுலா தொழில்முனைவோர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான விளக்கம் மற்றும் அறிமுக கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பாக Bed & Breakfast/Home stay establishment, Camping sites, Caravan Tour Operators /Caravan Park Operators & Adventure Tourism Operators ஆகிய சுற்றுலா தொழில்முனைவோர்களுக்கு மாநிலத்தில் முதன்முறையாக உரிமம் வழங்குதல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை மாவட்டத்தில் செயல்படுத்து வகையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட அலுவலர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி பதிவுகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் விளக்கங்கள் கேட்டு பெற்றுக்கொண்டனர்.

புதிய பதிவுகள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவித்துள்ள இணையதளம் http:tntourismtors.com வாயிலாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பதிவுகள் ஏதும் இன்றி மேற்கூறிய தொழில்கள் நடத்துவது கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட சுற்றுலா அலுவலர் அன்பரசு நகராட்சி ஆணையாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுற்றுலா தொழில்முனைவோர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Spread the love