February 3, 2023

தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீடு செய்கிறது சாம்சங்

சென்னை, நவ.26

டெலிகாம் கருவிகளைச் சொந்தமாகத் தயாரித்து வரும் சாம்சங் அதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாட்டில் சுமார் 400 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் புதிய 5ஜி மற்றும் 4ஜி ரேடியோ கருவிகளைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது சாம்சங். இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியாவில் உற்பத்தித் துறையை மேம்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ள பிஎல்ஐ திட்டம் மூலம் டெலிகாம் கருவிகள் மற்றும் உபகரணங்களைத் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே நோக்கியா மற்றும் எரிக்சன் கிளை நிறுவனமான ஜாபிள் ஆகியவை இந்தியாவில் 5ஜி டெலிகாம் கருவிகளைத் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த வரிசையில் தற்போது சாம்சங் பிஎல்ஐ திட்டத்தின் வாயிலாகக் களத்தில் இறங்கியுள்ளது.

சாம்சங் சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் 4ஜி/5ஜி டெலிகாம் கருவிகளைத் தயாரிக்கப் புதிய உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளது. இப்புதிய தளத்தின் மூலம் இந்திய சந்தைக்கான தேவையை மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சந்தை தேவையையும் பூர்த்திச் செய்யப்படும். சாம்சங் வருகை மூலம் இந்தியாவில் 5ஜி சேவை விரிவாக்கம் வேகப்படுத்த முடிவது மட்டும் அல்லாமல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும். மேலும் சாம்சங் நிறுவனம் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களிடம் இருந்து 5ஜி கருவிகளுக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சாம்சங் காஞ்சிபுரத்தில் 400 கோடி ரூபாயில் தொழிற்சாலை அமைப்பது மூலம் மத்திய அரசின் 12,195 கோடி ரூபாய் மதிப்பிலான டெலிகாம் கருவிகளுக்கான Pஸிணூ திட்டத்தில் இணைந்துள்ளது.

Spread the love