சென்னை, ஜன.18
ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், ஃப்லெக்ஸ், சால்காம்ப் உள்ளிட்ட பல உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலையை நிறுவியுள்ளது.
2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.1,588 கோடி மதிப்பிலான முதலீட்டில் சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் நிறுவனம் தொழிற்சாலையை தொடங்கியுள்ளது.
இதில் புதிய எலக்ட்ரானிக் உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டு தமிழ்நாட்டில் நுழைந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ஜப்பானிய எலெக்ட்ரிக் நிறுவனமான மிட்சுபி´ தனது முதல் தொழிற்சாலையை இந்தியாவில் தமிழகத்தில் தொடங்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏசி இயந்திரம் மற்றும் கம்ப்ரஸர் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இது. இது குறித்து மிட்சுபிஷி நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் அமைய உள்ள இந்த தொழிற்சாலை ரூ.1,800 கோடி செலவில் நிறுவப்பட உள்ளது. 2025 அக்டோபர் மாதத்தில் உற்பத்தியை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழக பொருளாதார வளர்ச்சிக்கான தேவை பூர்த்தி செய்யப்படும். உள்ளூர் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.