November 29, 2022

டொயோட்டா கிளான்சா சிஎன்ஜி முன்பதிவு துவக்கம்

மும்பை, நவ.5

டொயோட்டா நிறுவனம் தனது கிளான்சா சிஎன்ஜி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ எஸ்-சிஎன்ஜி வெர்சன் விலையை இந்தியாவில் அறிவித்து இருந்தது. புதிய பலேனோ மாடல் விலை இந்தியாவில் ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. மாருதி சுசுகியை தொடர்ந்து டொயோட்டா நிறுவன விற்பனையாளர்கள் புதிய கிளான்சா சிஎன்ஜி மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய கிளான்சா சிஎன்ஜி மாடல் கிளான்சா இ-சிஎன்ஜி பெயரில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த முன்பதிவுகள் விற்பனையாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது.

இந்த நிலையில், புதிய டொயோட்டா கிளான்சா சிஎன்ஜி மாடலின் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் டொயோட்டா கிளான்சா சிஎன்ஜி மாடல் எஸ், ஜி மற்றும் வி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. புதிய டொயோட்டா கிளான்சா மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் சிஎன்ஜி கிட் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் பெட்ரோல் மோடில் 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. சிஎன்ஜி மோடில் இந்த கார் 76 ஹெச்பி பவர், 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிசன் வழங்கப்படுகிறது.

Spread the love