November 29, 2022

டொயோட்டா கிளான்சா இ-சிஎன்ஜி
இந்திய சந்தையில் அறிமுகம்

புது தில்லி, நவ.11

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இ-சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட கிளான்சா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

புதிய டொயோட்டா மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 43 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கிளான்சா மட்டுமின்றி அர்பன் குரூயிசர் ஹைரைடர் இ-சிஎன்ஜி வேரியண்டும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என டொயோட்டா அறிவித்து இருக்கிறது.

புதிய டொயோட்டா கிளான்சா இ-சிஎன்ஜி மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கார் லிட்டருக்கு 30.61 கிலோமீட்டர் வரை செல்லும் என ஏஆர்ஏஐ சான்று பெற்று இருக்கிறது. டொயோட்டா கிளான்சா இ-சிஎன்ஜி மாடலில் உள்ள 1.2 லிட்டர் கே சீரிஸ் என்ஜின் 76 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிசன் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவர் அடுல் சூட் தெரிவித்துள்ளதாவது:

நுகர்வோருக்கான நிறுவனம் என்ற வகையில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் வாடிக்கையாளர் விருப்பதை முதலில் வைத்துக் கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளது. சந்தையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதோடு, வாடிக்கையாளர்களின் கனவுகள் மீது தெளிவான கண்ணோட்டத்தில் சிறந்த பொருட்கள் மற்றும் சேவைகளை அவர்களுக்கு வழங்குவதே எங்களின் குறிக்கோள்.” “இதே குறிக்கோளை மனதில் வைத்துக் கொண்டே சிஎன்ஜி பிரிவில் களமிறங்குவதை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

Spread the love