January 23, 2023

டெக்னோ ஃபேண்டம் எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம்

சென்னை, ஜன.18

டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஃபிளாக்ஷிப் ஃபேண்டம் எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கழற்றி, மாட்டிக் கொள்ளும் வசதி கொண்ட போர்டிரெயிட் லென்ஸ் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை டெக்னோ ஃபேண்டம் எக்ஸ் 2 ப்ரோ பெற்று இருக்கிறது.

இந்த லென்ஸ் 65 எம்எம் அளவில் 2.5எக்ஸ் ஆப்டிக்கல் ஜூம் வசதியை கொண்டிருக்கிறது. இதன் சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.8 இன்ச் எப்எச்டி+ 120எர்ட்ஸ் அமேலால்ட் ஸ்கிரீன், 50 எம்பி பிரைமரி கேமரா, 50 எம்பி ஐசோசெல் ஜேஎன்1 சென்சார், 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 32 எம்பி செல்ஃபி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.

டெக்னோ ஃபேண்டம் எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்லைட் சில்வர் மற்றும் ஸ்டார்டஸ்ட் கிரே வண்ணங்களில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு அமேசான் தளத்தில் துவங்கி விட்டது. விற்பனை ஜனவரி 24 ஆம் தேதி துவங்க இருக்கிறது. புது டெக்னோ ஸ்மார்ட்போன் வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Spread the love