October 4, 2022

டூயல் ரியர் கேமராவுடன் களமிறங்கும் விவோ ஒய் 16 ஸ்மார்ட்போன்

சென்னை, செப்.22

விவோ நிறுவனம் புதிய ஒய் 16 ஸ்மார்ட்போனை இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து வெளிவந்துள்ளதாவது: விவோ ஒய் 16 ஸ்மார்ட்போன் 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் பி35 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஃபன்டச் ஓஎஸ் 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த புதிய விவோ போன். இந்த போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும். பின்பு 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.

ஹெட்ஃபோன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.0, வைஃபை, ஜிபிஎஸ், 4ஜி எல்டிஇ போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு வெளிவரும். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.12,499-விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love