December 9, 2022

டுவிட்டர் ஊழியர்களை வரவேற்கும் கூநிறுவனம்

புது தில்லி, நவ.19

இந்தியாவைச் சேர்ந்த சமூக ஊடக நிறுவனமான கூ நிறுவனம், டுவிட்டர் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை சேர்த்துக்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: டுவிட்டர் நிறுவனத்தை, உலகின் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் வாங்கிய நிலையில், செலவுகளை குறைக்கும் முயற்சியாக, அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறார். மேலும், கடுமையாக பணியாற்ற விரும்புவோர் மட்டும் நீடிக்கலாம்; மற்றவர்கள் விலகிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பலர் டுவிட்டர் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், கூ நிறுவனத்தின் இணை நிறுவனர் மயங்க் பிடவட்கா, டுவிட்டரிலிருந்து வெளியேற்றப்பட்ட அல்லது விலகியவர்களில் பலரை, தங்களது நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ள இருப்பதாக, அறிவித்துள்ளார். கூ நிறுவனம், 2020ம் ஆண்டு, கொரோனா பரவலுக்கு இடையே துவங்கப்பட்டது. இதன் செயலியை, ரூ.5 கோடிக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது பிராந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வரும் இந்நிறுவனம், வணிகத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டு வருகிறது.

Spread the love