December 8, 2022

டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு
தொடர்ந்து நஷ்டம்: ஹர்தீப் சிங் பூரி தகவல்

புது தில்லி, நவ.3

டீசல் விற்பனையில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் தொடர்கிறது; அதே நேரத்தில் பெட்ரோல் விற்பனையில் நஷ்டம் குறைந்து லாபம் கிடைக்கிறது என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் தெரிவித்துள்ளதாவது: உக்ரைனில் போர் தொடங்கியபோது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. ஆனால், உள்நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எரிபொருள் விலையை உயர்த்தாமல், நஷ்டத்தை எதிர்கொள்ளுமாறு பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துவிட்டபோதிலும், டீசல் விற்பனையில் ஒரு லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.4 வரை நஷ்டம் தொடர்கிறது. அதே நேரத்தில் பெட்ரோல் விற்பனையில் லாபம் கிடைக்கிறது. டீசல் விற்பனையில் ஏற்படும் நஷ்டத்தை இதனைக் கொண்டு ஈடுகட்ட முயற்சிக்கப்படுகிறது.ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.19,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட அரசு கடந்த மாதம் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம் அளித்தது. ஆனால், மானிய கோரிக்கை ரூ.28,000 கோடியாக இருந்தது என்றார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், இப்போதைக்கு விலைக் குறைப்பு இருக்காது என்பது அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Spread the love