November 29, 2022

டிவிஎஸ் நிறுவனத்துடன் அமேசான் கூட்டு

சென்னை, நவ.10

அமேசான் இந்தியா மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் எலக்ட்ரிக் மொபிலிட்டி, மின்சார உள்கட்டமைப்பு மற்றும் இணைக்கப்பட்ட சேவைகள் ஆகியவற்றை வலுப்படுத்தப் புதிதாக ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளது.

இந்த இணைப்பின் ஒரு பகுதியாக, அமேசான் நிறுவனம் இந்தியாவில் செய்யும் லாஸ்ட் மைல் டெலிவரிக்கு தேவையான எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் பெற்றுப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதோடு பிற அமேசான் வர்த்தகக் குழுக்களின் நெட்வொர்க் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பணிகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்த ஏதுவான பகுதிகளை இரு நிறுவனங்களும் இணைந்து ஆய்வு செய்து போதுமான வாகனங்களைப் பயன்பாட்டில் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இரு நிறுவனங்களும் டிவிஎஸ் மோட்டார்ஸின் எலக்ட்ரிக் வெஹிக்கல் சொல்யூசன்-களை இந்தியா முழுவதும் அதன் பார்ட்னர் பேஸ் மற்றும் டெலிவரி அசோசியேட்ஸ் மூலம் பைலட் முறையில் சோதனை செய்ய உள்ளது. இந்த மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியாத இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்குள் 10,000 எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த அமேசான் இந்தியா டிவிஎஸ் மோட்டார்ஸ்-ன் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை டெலிவரிக்குப் பயன்படுத்த உள்ளது. டிவிஎஸ் மோட்டார் அடுத்த 2 வருடத்தில் பல எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை இந்தியா மற்றும் வெளிநாட்டுச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில் அமேசான் நிறுவனத்துடனான கூட்டணி மூலம் 10,000 எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக விற்பனை செய்ய முடியும்.

Spread the love