October 2, 2022

டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம்
ரூ.390 கோடி நிகர லாபம் ஈட்யடிது

புது தில்லி, பிப்.9

டிசம்பருடன் முடிவடைந்த 3வது காலாண்டில் டியூப் இன்வெஸ்ட்மென்ட் ஆஃப் இந்தியா நிறுவனம் ரூ.390.04 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் எம்.ஏ.எம். அருணாசலம் தெரிவித்துள்ளதாவது:

நிறுவனத்தின் அனைத்துப் பிரிவு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி டிசம்பர் காலாண்டில் நிலையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதனை எடுத்துக்காட்டும் விதமாக, கடந்தாண்டு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.107.90 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.390.04 கோடியானது. வருவாய் ரூ.1,715.89 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.3,435.71 கோடியைத் தொட்டது.

மோட்டார் வாகன துறையில் ஏற்பட்ட சரிவு நிலையின் சவால்களை நிறுவனம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏனெனில், அது, உள்நாட்டில் உலோக உபகரண வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

2021 டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் ரூ.3,383.71 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.9,186.63 கோடியாகவும், நிகர லாபம் ரூ.142.78 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.765.82 கோடியாகவும் இருந்தது என்று அவர் தெரிவித்தார்.

Spread the love