December 8, 2022

டிட்கோவின் ரூ.150 கோடிக்கான பங்கு ஈவுத்தொகை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது

சென்னை, நவ.15

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் 2021-22ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான 150 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன வரலாற்றிலேயே மிக அதிகமான பங்கு ஈவுத்தொகை வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து இலாபம் ஈட்டி வருகிறது. 2021-22 ஆம் நிதியாண்டில் இந்நிறுவனமானது வரிக்கு பிந்தைய இலாபமாக ரூபாய் 252,17,49,676/- ஈட்டியுள்ளது.

2021-22 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த வருடத்திற்கான நிகர இலாபத்தில் 59.48% பங்கு ஈவுத்தொகை 150 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசிற்கு செலுத்துவதாக 23.09.2022 அன்று நடைபெற்ற த7வது வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் டிட்கோ அறிவித்தது. அதன்படி, மேற்படி பங்கு ஈவுத்தொகையான 150 கோடி ரூபாய்க்கான காசோலையை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்வரிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச, கிருஷ்ணன், மற்றும் டிட்கோ மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Spread the love