January 23, 2023

டிச.9ல் இந்திய சந்தையில் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி எம்04

மும்பை, டிச.8

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போனினை எண்ட்ரி லெவல் பிரிவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போன் டிசம்பர் 09 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான லேண்டிங் பக்கம் அமேசான் தளத்தில் இடம்பெற்று இருந்தது.

மேலும் புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்களும் அமேசான் தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போன் சீ கிரீன் மற்றும் ஷேடோ புளூ வண்ணங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

இத்துடன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, டூயல் கேமரா சென்சார்கள், வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பவர் பட்டன் ணற்றும் வால்யூம் பட்டன்கள் வலதுபுறத்தில் இடம்பெற்று இருக்கிறது. புதிய கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9 ஆயிரத்திற்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.5 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 13எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி கேமரா, 5 எம்பி லென்ஸ், 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 கோ எடிசன் ஒஎஸ் வழங்கப்படுகிறது.

Spread the love