February 3, 2023

டிச.4ல் சென்னை விமான நிலைய
பன்னடுக்கு வாகன நிறுத்தம் திறப்பு

சென்னை, நவ.30

சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வாகன நிறுத்தும் மையம் டிச.4ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:

சென்னை விமான நிலைய முன் பகுதியில் ரூ.250 கோடியில் 2.5 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்ட வாகன நிறுத்தும் மையத்தில் 2,150 கார்களை நிறுத்த முடியும். வாகன நிறுத்தும் மையத்தின் கிழக்குப் பகுதியில் சுமார் 750 கார்களையும், மேற்குப் பகுதியில் 1,400 கார்களையும் நிறுத்தலாம். இந்த வாகன நிறுத்தும் மையம் சாலை, ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகன நிறுத்தும் மையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்களில் சார்ஜ் செய்வதற்கு முன்பதிவு செய்யலாம். வாகன நிறுத்துமிடத்தை முன்பதிவு செய்யவும், சார்ஜ் கட்டணத்தை செலுத்தவும் கைப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட வுள்ளது. எதி??காலத்தில் மின்சார வாகனங்கள் அதிகரிக்கும்போது, சார்ஜ் ஏற்றும் முனையங்களும் அதிகரிக்கப்படும்.

வாகன நிறுத்தும் மையத்தோடு உள்ள வணிக வளாகத்தில் 5 மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகள், சிறுவர் விளையாடும் பகுதிகள், உணவகங்கள், சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவை உள்ளன. இந்த வாகன நிறுத்தும் மையம் டிச.4-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. பன்னடுக்கு வாகன நிறுத்தும் மையம் செயல்பட தொடங்கியதும் தற்போது தரைத்தளத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அழகுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சென்னை விமான நிலையத்தின் வெளிப்புற அழகு இன்னும் அதிகரிக்கும் என்று சென்னை விமான நிலைய ஆணையகம் தெரிவித்துள்ளது.

Spread the love