February 3, 2023

டிச.30ல் ஐபிஓ வெளியிடுகிறது யுனிபார்ட்ஸ் இந்தியா

புது தில்லி, நவ.26

யுனிபார்ட்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் ஐபிஓ, எனும் புதிய பங்கு வெளியீடு, 30ம் தேதி துவங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பிரிவில் இயங்கி வரும் யுனிபார்ட்ஸ் நிறுவனம், அதன் புதிய பங்கு வெளியீடு, இம்மாதம் 30ம் தேதியன்று துவங்கி, டிசம்பர் 2ல் முடிவடையும் என தெரிவித்துள்ளது.

துணிகர முதலீட்டாளர்களுக்கான பங்கு வெளியீடு, 29ம் தேதி துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பங்கு வெளியீட்டின் போது, முழுக்க முழுக்க, நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. மொத்தம் 1.45 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இது, இந்நிறுவனத்தின் மூன்றாவது முயற்சியாகும். இதற்கு முன், 2018 டிசம்பரில் ஒரு முறையும், 2014 செப்டம்பரில் ஒரு முறையும் பங்கு வெளியீட்டுக்கு வர முயற்சி செய்தது. ஆனால், இரு சந்தர்ப்பங்களிலும் பின்வாங்கி விட்டது.

Spread the love