January 22, 2023

டிச.10ல் பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் அறிமுகம்

சென்னை, டிச.6

பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் 2023 எஸ் 1000 ஆர்ஆர் மோட்டார்சைக்கிளை தற்போது நடைபெற்று வரும் இந்திய பைக் வார நிகழ்வில் காட்சிக்கு வைத்தது.

இதன் மூலம் இந்த மாடலை பிஎம்டபிள்யூ இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. புதிய 2023 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் டிசம்பர் 10 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும், இதன் டிசைனை பொருத்தவரை மெல்லிய எல்இடி யஹட்லைட், ஃபேரிங்கில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு அதிக ஸ்டேபிலிட்டி வழங்கும் வகையில் ஏரோ பேக்கேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிதாக சேர்க்கப்பட்ட விங்லெட்கள் 10 கிலோ வரை டவுன்ஃபோர்ஸ் வழங்குகிறது. இதன் பின்புறம் புதிதாக உருவாக்கப்பட்டு அதிக செயல்திறன் வெளிப்படுத்துவதோடு, மேம்பட்ட அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களை கொண்டிருக்கிறது.

இந்த மாடலில் 999சிசி, இன்-லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிஎம்டபிள்யூ ´ஃப்ட்கேம் உள்ளது. இது 206.5 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. எலெக்ட்ரிக் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் டிராக்‌சன் கண்ட்ரோல் சிஸ்டம், ஸ்லைடு கண்ட்ரோல், ஏபிஎஸ் மற்றும் பிரேக் ஸ்லைட் அசிஸ்ட், நான்கு ரைடு மோட்கள், ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், பை-டைரெக்‌சனல் குயிக்‌´ஃப்டர், லான்ச் கண்ட்ரோல், பிட் லேன் லிமிட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

Spread the love