November 29, 2022

டிசம்பர் மாதத்தில் கடனுக்கான வட்டி உயருகிறது: ஆர்பிஐ

புது தில்லி, நவ.1

நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை ஆர்பிஐ கடந்த சில மாதங்களாக உயர்த்தி வருகிறது.

இந் நிலையில், ஆர்பிஐயின் நிதிக்கொள்கை குழு கூட்டம், 3ந்தேதி நடக்கிறது.

அதில், மீண்டும் ரெபோ ரேட் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் வட்டி உயர்வு அறிவிப்பு இடம்பெறாது என்று எஸ்பிஐயின் ஆராய்ச்சி பிரிவான எஸ்பிஐ ரிசர்ச் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ ரிசர்ச் வெளியிட்டுள்ள ஒரு செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நவம்பர் 3ந் தேதி நடைபெறும் கூட்டம், வழக்கமான கூட்டமாக இருக்கும். அதில் எந்த முடிவுகளும் அறிவிக்கப்படாது. ஆனால், டிசம்பர் மாத மத்தியில், ரெபோ ரேட்டை 0.5 சதம் முதல் 0.75 சதம் வரை உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக, 0.5 சதம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரெபோ ரேட் உயர்வால், வாடிக்கையாளர்கள் பெற்ற வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் ஆகியவற்றுக்கான வட்டியும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love