January 21, 2023

டிசம்பருடன் நிறைவடைந்த காலாண்டில் யூனியன் வங்கி லாபம் இரு மடங்கு உயர்வு

மும்பை, ஜன.21

யூனியன் வங்கியின் நிகர லாபம் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இரட்டிப்பாகியுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள யூனியன் வங்கி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (2022 அக்டோபர்-டிசம்பர்) வங்கியின் நிகர லாபம் ரூ.2,245 கோடியாக உள்ளது.

இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ஏறத்தாழ இரு மடங்கு அதிகமாகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.1,085 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், மதிப்பீட்டு மாதங்களில் வங்கியின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.24,154 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.19,454 கோடியாக இருந்தது. வங்கியின் வாராக் கடன் கடந்த 2021 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 11.62 சதமாக இருந்து. அது 2022-ஆம் ஆண்டின் அதே மாதங்களில் 7.93 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love