September 27, 2022

டிஎம்பி வங்கியின் மேலாண் இயக்குநராக கிருஷ்ணன் சங்கரப்பிரமணியம் பொறுப்பேற்பு

சென்னை, செப்.6

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலராக, மூத்த வங்கியாளர் கிருஷ்ணன் சங்கரசுப்பிரமணியம் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலராகப் பதவி வகித்து வந்த கே.வி. ராமமூர்த்தியின் பதவிக் காலம் செப்.3 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலராக கிருஷ்ணன் சங்கரசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். ஆர்பிஐயின் ஒப்புதல் கடிதத்தின்படி, அடுத்த 3 ஆண்டு காலத்துக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு வருவதற்கு முன்பு, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலராக அவர் பொறுப்பு வகித்தார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது தொடக்க பொதுப் பங்குகளை வெளியிட்டுள்ள நிலையில், விற்பனைக்கு முன்னதாக ஆங்கர் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ. 363 கோடியே 53 லட்சத்தை வங்கி திரட்டியுள்ளது. பங்கு வெளியீடு செப்.7 நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love