January 25, 2023

டிஎம்பி – பஜாஜ் அலையன்ஸ் இடையே வணிக ஒப்பந்தம் கையயழுத்தானது

சென்னை, டிச.10

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியும், பஜாஜ் அலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இடையே வணிக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 16 மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களில் 509 கிளைகள், 12 மண்டல அலுவகங்களின் மூலம் சுமார் ஐம்பது லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது. வங்கி சேவைகளில் தனது வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வு இருக்கும் வண்ணம், புதிதாக வணிக ஒப்பந்தத்தை பஜாஜ் அலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இதுகுறித்து வங்கியின் நிர்வாக இயக்குநர்- தலைமைச் செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது:

பங்குச்சந்தையில் பட்டியலிட்ட பிறகு, வங்கியானது அதன் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது. அதில் கூடுதலாக, அதன் பல்வேறு திட்டங்களிலும் சேவைகளிலும் பல்வேறு அம்சங்களை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த வணிக ஒப்பந்தம் ஒரு மகத்தான நிகழ்வாகும் என்றார். இந் நிகழ்ச்சியில் பஜாஜ் அலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் – தலைமைச் செயல் அதிகாரி தருண் சாக், வங்கியின் முதன்மை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவனத்தின் முதன்மை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Spread the love