October 4, 2022

டால்பி விசன் கொண்ட கியூஎல்இடி டிவிக்கள் இந்தியாவில் அறிமுகம் செய்தது தாம்சன்

மும்பை, செப்.9

சூப்பர் பிளாஸ்டிரோனிக்ஸ் பிரைவேட் லிமிடெட் புதிய தாம்சன் கியூஎல்இடி ஸ்மார்ட் டிவிக்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களில் கூகுள் டிவி வசதி உள்ளது. இவை 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் ஸ்கிரீன் அளவுகளில் கிடைக்கின்றன. மேலும் இவற்றில் டால்பி விசன், எச்டிஆர்10+, 40 வாட் ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி உள்ளது.

இந்த மாடல்களில் மெல்லிய, பெசல்-லெஸ் டிசைன் மற்றும் மெட்டாலிக் ஸ்டாண்ட் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஏ53 மீடியாடெக் எம்டி9602 பிராசஸர், மாலி ஜி52 எம்சி 1 ஜிபியு மற்றும் டூயல் பேண்ட் வைபை வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய தாம்சன் டிவி 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ.33,999, ரூ. 40,999 மற்றும் ரூ.59,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவை ப்ளிப்கார்ட் தளத்தின் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் போது விற்பனைக்கு வருகிறது.

Spread the love