November 29, 2022

டார்க் கிராடோஸ் எலெக்ட்ரிக் பைக் வினியோகம் துவக்கம்

புனே, அக்.25

புனேவை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான, டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தனது கிராடோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வினியோகம் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

முதற்கட்டமாக மும்பையில் டார்க் கிராடோஸ் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்- டார்க் கிராடோஸ்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருந்தது . மேலும், இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டாண்டர்டு மற்றும் ஆர் என இரண்டு வேரிண்ட்களில் கிடைக்கிறது. இவை முறையே 7.5 கிவோவாட் மற்றும் 9 கிலோவாட் செயல்திறன் வெளிப்படுத்துகின்றன.

டார்க் கிராடோஸ் ஆர் வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. ஸ்டாண்டர்டு மாடல் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இரு வேரியண்ட்களின் பேட்டரி ரேன்ஜ் ஒரே மாதிரியே வழங்கப்பட்டு இருக்கிறது. கிராடோஸ் மாடல் இகோ மோடில் 120 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என்றும் சிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் மோடில் முறையே 100 கிலோமீட்டர் மற்றும் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. ஆர் வேரியண்ட்டில் உள்ள பேட்டரியை 80 சதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரமே ஆகும். இந்திய சந்தையில் டார்க் கிராடோஸ் ஸ்டாண்டர்டு மாடல் விலை ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் என்றும் ஆர் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 37 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இந்த மாடல் ரெவோல்ட் ஆர்வி400 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

Spread the love