December 9, 2022

டாடா ஸ்டீல் நிறுவன லாபத்தில் 87 சதம் சரிவு

மும்பை, நவ.1

டாடா குழுமத்தின் மிகவும் முக்கியமான வர்த்தக நிறுவனமாக இருக்கும் டாடா ஸ்டீல் செப்டம்பர் காலாண்டு லாபம் அளவு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 87 சதம் சரிந்து வெறும் ரூ.1,514 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது.

இதேபோல் டாடா ஸ்டீல் இக்காலாண்டில் 59,877.5 கோடி ரூபாய் என்ற 1 சதம் குறைவான வருமானத்தைப் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனத்தின் லாபம் குறைய மிகவும் முக்கியமான காரணம் அதிகப்படியான செலவுகளும், மந்தமான ஆப்ரேட்டிங் மார்ஜின் தான். டாடா ஸ்டீல் நிறுவனத்தின் EBITDA அளவு 62 சதம் சரிந்து 6,060.4 கோடி ரூபாயாகவே உள்ளது.

இக்காலாண்டில் அப்ரேட்டிங் மார்ஜின் 17.13 சதம் சரிந்து 10.12 சதமாக உள்ளது, இதேபோல் உற்பத்தி பொருள் விலை கடந்த ஆண்டை காட்டிலும் 57 சதம் உயர்ந்துள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இந்திய வர்த்தகம் வளர்ச்சி காலாண்டு அடிப்படையில் 21 சதமும், வருடாந்திர அடிப்படையில் 7 சதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் ஐரோப்பிய சந்தையில் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. மேலும் குளிர்காலத்தில் சீனாவின் உற்பத்தி குறையும் நிலையில் டாடா ஸ்டீல் வர்த்தகம் அதிகரிக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

டாடா குழுமம் தனது உலோக வர்த்தகத்தில் செலவுகளைக் குறைக்கவும், செயல்திறனை அதிகரிக்கவும், அப்ரேட்டிங் மார்ஜின் அளவுகளை அதிகரிக்க டி வி நரேந்திரன் தலைமையில் டாடா குழுமத்தில் இருக்கும் 7 உலோக நிறுவனங்களான டாடா ஸ்டீல் லாங் ப்ராடெக்ட்ஸ், டாடா மெட்டாலிங்க்ஸ், டின்பிளேட் கம்பென் ஆப் இந்தியா, TRF, இந்தியன் ஸ்டீல் & வயர் ப்ராடெக்ட்ஸ், டாடா ஸ்டீல் மைனிங், S&T மைனிங் ஆகியவற்றை டாடா ஸ்டீல் நிறுவனத்தில் இணைக்கப்பட உள்ளது.

Spread the love