December 9, 2022

டாடா மோட்டார்ஸ் மொத்த விற்பனை அக்டோபரில் 15.49 சதம் அதிகரிப்பு

மும்பை, நவ.8

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 15.49 சதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 78,335-ஆக இருந்தது. முந்தைய 2021ம் ஆண்டின் இதே மாதத்தில் நிறுவனம் 67,829 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த அக்டோபர் மாத விற்பனை 15.49 சதம் உயர்ந்துள்ளது.

இந்த மாதத்தில் உள்நாட்டு விற்பனை 76,537-ஆக இருந்தது. 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்திய உள்நாட்டு விற்பனையான 65,151 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 17 சதம் அதிகமாகும்.

மேலும், நிறுவனக் கார்களின் விற்பனையைப் பொருத்தவரை, கடந்த ஆண்டு அக்டோபரில் 34,155-ஆக இருந்த விற்பனை 33 சதம் அதிகரித்து இந்த அக்டோபரில் 45,423-ஆகியுள்ளது. எனினும், 2021 அக்டோபரில் 230-ஆக இருந்த கார்களின் ஏற்றுமதி, கடந்த மாதத்தில் 206-ஆகக் குறைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love