November 29, 2022

டாடா மோட்டார்ஸில் எல்ஐசி நிறுவன பங்குகள்
5 சதத்துக்கு மேல் அதிகரிப்பு

புது தில்லி, நவ.2

டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் எல்ஐசி ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகள் 5 சதத்தைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை 16,59,48,741-லிருந்து 16,61,98,741 ஈக்விட்டி பங்குகளாக அதிகரித்துள்ளதாக எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அதன் பங்குகளை 4.997 சதத்திலிருந்து 5.004 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், அக்டோபர் 31ஆம் தேதி முடிவுடைய டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கையிறுப்பு 5 சதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே காலகட்டத்தில், சராசரியாக ரூ.455.69 அளவில் டாடா மோட்டார்ஸ் பங்குகள் கையகப்படுத்தியுள்ளது எஸ்ஐசி நிறுவனம். விதிமுறைகளின்படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஒரு நிறுவனத்தில் தங்கள் பங்குகள் 5 சதவீதத்தை தாண்டும்போது பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி-யிடம் தெரிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

டாடா மோட்டார்ஸ் சந்தை மூலதனம் ரூ.1.38 லட்சம் கோடியாக உள்ள நிலையில், எல்ஐசியின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் ரூ.605.30ல் முடிவடைந்தது. இது முந்தைய முடிவில் இருந்து 0.22 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே போல் டாடா மோட்டார்ஸ் பங்கு 2.16 சதம் உயர்ந்து ரூ.421.50 முடிந்தது.

Spread the love