October 2, 2022

டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார்
விரைவில் இந்தியாவில் அறிமுகம்

மும்பை, செப்.17

இந்திய சந்தையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில், தனது தற்போதைய கார் மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்சனை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டாடா ஹேரியர் மிட்-சைஸ் எஸ்யுவி மற்றும் பன்ச் மைக்ரோ எஸ்யுவி உள்ளிட்டவை எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. டாடா ஹேரியர் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை உருவாக்கும் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும், இந்த மாடல் அடுத்த ஆண்டின் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதே போன்று டாடா பன்ச் எலெக்ட்ரிக் வெர்சனும் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளது.

2025 வாக்கில் பத்து எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு கொண்டுவர டாடா மோட்டார்ஸ் முடிவு செய்திருப்பதாக அண்மையில் அறிவித்து இருந்தது.

புதிய ஹேரியர் எலெக்ட்ரிக் மாடல் ஸ்பை படங்கள் மற்றும் வீடியோ என இதுவரை எதுவும் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வு நடைபெற இருப்பதை அடுத்து ஹேரியர் எலெக்ட்ரிக் மாடல் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். டாடா ஹேரியர் எலெக்ட்ரிக் மாடல் விலை இந்தியாவில் ரூ. 20 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும். டாடா டிகோர் மற்றும் நெக்சான் எலெக்ட்ரிக் மாடல்களின் இடையில் பன்ச் எலெக்ட்ரிக் மாடல் நிலை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Spread the love