October 4, 2022

டாடா குழுமத்துக்குச் சொந்தமான கட்டடங்களுக்கு ஏர் இந்தியா அலுவலகங்களை விரைவில் மாற்ற திட்டம்

புது தில்லி, செப்.10

மத்திய அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் இயங்கி வரும் ஏர் இந்தியா குழுமத்துக்குச் சொந்தமான அலுவலகங்களை காலி செய்யும் முனைப்பில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: டாடா குழுமத்துக்குச் சொந்தமான கட்டடங்களுக்கு ஏர் இந்தியா அலுவலகங்களை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மாற்ற திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்தின் வசம் வந்தது. இதையடுத்து, படிப்படியாக மத்திய அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்களை டாடா குழுமத்தின் கட்டடங்களுக்கு மாற்றும் பணி தொடங்கியிருக்கிறது.
சுமார் 70 ஆயிரம் கோடி இழப்பில் ஏர் இந்தியா நிறுவனம் இயங்கி வந்ததால் விமானங்களைப் பராமரிப்பதிலும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் நிர்வாக ரீதியாக சிக்கல் ஏற்பட்டது.

இதனால் அதனை தனியாருக்கு விற்பனை செய்யும் வகையில் ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் பல்வேறு பெருநிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், டாடா நிறுவனம் வெற்றி பெற்றது. இதன் மூலம் 69 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமான நிலையில் தற்போது ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது.

Spread the love