December 9, 2022

டாடா ஏஸ் மின்சார வாகனம் உற்பத்தி: டாடா திட்டம்

மும்பை, அக்.29

குட்டி யானை என்று செல்லமாக அழைக்கப்படும், டாடா ஏஸ் இலகு ரக சரக்கு வாகனம், கடந்த 17 ஆண்டுகளாக வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்நிலையில், அதனை முழுமையான மின்சார சரக்கு வாகனமாக மாற்ற, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிரிஷ் வாஹ் தெரிவித்துள்ளதாவது: இணையதள வணிக நிறுவனங்களின் சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளதால், இலகு ரக மின்சார வாகனங்களின் தேவை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மே மாதம், டாடா ஏஸ் இலகு ரக மின்சார வாகனம் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இணையதள வாயிலாக, 39 ஆயிரத்திற்கு மேற்பட்ட முன்பதிவுகள் வந்துள்ளன. மேலும், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங், சர்வீஸ் மற்றும் பேட்டரி ஆகியவற்றில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அதோடு, அதிக பயண தூரம் செல்லும் மின்சார டாடா ஏஸ் வாகனத்தையும் உருவாக்குவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love