February 3, 2023

ஜெஸ்ட்மணி நிறுவனத்தை கைப்பற்ற போன்பே முடிவு

மும்பை, நவ.26

ஜெஸ்ட்மணி நிறுவனத்தை மொத்தமாக கைப்பற்ற போன்பே நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: ஜெஸ்ட்மணி புதிய முதலீடுகளை டெக் முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டமுடியாமல் தவிக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டியை உயர்த்தியதன் மூலம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிய முதலீட்டைப் பெற முடியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது போன்பே நிறுவனம் கைப்பற்றல் பேச்சுவார்த்தையைத் துவங்கி முக்கியக் கட்டத்தை அடைந்துள்ளது, இதனால் இரு நிறுவனம் மத்தியில் டீல் உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளையில் பை நவ் பே லேட்டர் சேவைக்கு இந்திய ரிசர்வ் வங்கி தீவிரமாகக் கண்காணிப்பது மட்டும் அல்லாமல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ள காரணத்தால் இப்பிரிவு வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் போன்பே ஜெஸ்ட்மணி நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது.

ஜெஸ்ட்மணி – போன்பே டீல் குறியீடு ஜெஸ்ட்மணி செய்தி கூறுகையில் இது யூகத்தின் அடிப்படையிலான செய்து எனக் கூறியுள்ளார். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை குறித்து அறிந்தவர்கள் விலை மற்றும் மதிப்பீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அடுத்த சில வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Spread the love