October 3, 2022

ஜூலை மாதத்தில் சேவைகள் துறை ஏற்றுமதி 20.2 சதவீதம் அதிகரிப்பு: ஆர்பிஐ தகவல்

மும்பை, செப்.3

நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி, கடந்த ஜூலையில், 20.2 சதம் அதிகரித்துள்ளது என, ஆர்பிஐ தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கடந்த ஜூலையில், சேவைகள் துறை ஏற்றுமதி 20.2 சதம் அதிகரித்து, ரூ.1.86 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இருப்பினும், கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, குறைந்துள்ளது. கடந்த ஜூனில் ஏற்றுமதி ரூ.2.02 லட்சம் கோடியாக இருந்தது. மேலும், மதிப்பீட்டு மாதத்தில் சேவைகள் துறை இறக்குமதி, கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடும்போது, 22.3 சதம் உயர்ந்துள்ளது.

இருப்பினும், கடந்த ஜூன் மாதத்துடன் உடன் ஒப்பிடும்போது சரிந்துள்ளது. கடந்த ஜூலையுடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சேவைகள் துறை ஏற்றுமதி ரூ.7.58 லட்சம் கோடியாகவும்; இறக்குமதி ரூ.4.72 லட்சம் கோடியாகவும் உள்ளது என, ஆர்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love