December 8, 2022

ஜூலை-செப்டம்பர் காலாண்டில்
சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் ரூ.111.75 கோடி வருவாய் ஈட்டியது

சென்னை, நவ.19

சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படும் வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் நிறுவனம், கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ.111.75 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில், நிறுவனத்தின் லாபம் ரூ.111.75 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது குறைவாகும். அப்போது நிறுவனத்தின் லாபம் ரூ.120.16 கோடியாக இருந்தது.

கடந்த செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், நிறுவனத்தின் லாபம் ரூ.241.86 கோடியாக அதிகரித்துள்ளது. அது, கடந்த ஆண்டின் இதே அரையாண்டில் ரூ.232.71 கோடியாக இருந்தது. அத்துடன், கடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் ரூ.1,064.29 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் இந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.1,225.85 கோடியாக அதிகரித்துள்ளது. செப்டம்பர் 30ல் முடிவடைந்த ஆறு மாத காலத்தில் மொத்த வருவாய் ரூ.2,012.64 கோடியிலிருந்து ரூ.2,472.07 கோடியாக உயர்ந்துள்ளது என்று அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love