September 27, 2022

ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல்
இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம்

புது தில்லி, செப்.16

ஜீப் நிறுவனம் தனது புது செரோக்கி மாடல் இந்திய சந்தையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த கார் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் என தெரியவந்துள்ளது.

இதன் ஸ்டைலிங் வேகனீர் மற்றும் கிராண்ட் வேகனீர் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. காரின் உள்புறம் மூன்று டிஸ்ப்ளேக்கள்- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், செண்ட்ரல் டச் ஸ்கிரீன் மற்றும் முன்புற பயணிகளுக்காக பிரத்யேக டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.

கிராண்ட் செரோக்கி மாடல் 5 சீட்டர் மற்றும், மூன்று அடுக்கு இருக்கை கொண்ட கிராண்ட் செரோக்கி எல் என இரண்டு வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கிறது. இதில் 5-சீட்டர் வேரியண்ட் மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளது.

புதிய கிராண்ட் செரோக்கி மாடல் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் ஆப்சனில் கிடைகும் என தெரிகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் கிராண்ட் செரோக்கி மாடல் பல்வேறு என்ஜின் ஆப்சன்கள் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் வெர்சன்களில் கிடைக்கிறது.

Spread the love