September 27, 2022

ஜிபிஎஸ் வசதி கொண்ட வாட்ச் 3 ப்ரோ ரியல்மி நிறுவனம் அறிமுகம்

மும்பை, செப்.8

ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட ரியல்மியின் முதல் மாடல் ஆகும். புதிய ரியல்மி வாட்ச் 3 ப்ரோ கடந்த ஆண்டு ரியல்மி அறிமுகம் செய்த ரிய்லமி வாட்ச் 2 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்சன் ஆகும். ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடலில் 1.78 இன்ச் அமோல்ட் ஸ்கிரீன், ஏஐ நாய்ஸ் கேன்சலேசன், வளைந்த டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், எஸ்பிஓ2 லெவல், ஹார்ட் ரேட் லெவல், ஸ்டிரெஸ் மற்றும் ஸ்லீப் குவாலிட்டி உள்ளிட்டவைகளை டிராக் செய்யும் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதில் 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள், ஐபி68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், 345 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. வாட்ச் 3 ப்ரோ மாடல் கிரே மற்றும் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 4 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை செப்டம்பர் 9 ஆம் தேதி ப்ளிப்கார்ட், ரியல்மி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் துவங்க உள்ளது.

Spread the love