October 4, 2022

ஜிபிஎஸ் டிராக்கிங் வசதியுடன்
அமேஸ்பிட் ஜிடிஎஸ் 4 இந்தியாவில் அறிமுகம்

புது தில்லி, செப்.21

அமேஸ்பிட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஜிடிஎஸ் 4 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இதே ஸ்மார்ட்வாட்ச் ஐஎப்ஏ நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மேம்பட்ட ஜிபிஎஸ் பொசிசனிங், 150-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் காலிங் மற்றும் ஸ்டான்ட் அலோன் மியூசிக் பிளேபேக் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்-இன் ரெகுலர் வெர்சனில் 1.75 இன்ச் அமோல்ட் டிஸ்ப்ளே, சதுரங்க வடிவம் கொண்ட டயல், மெட்டாலிக் ஃபிரேம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நேவிகேசன் கிரவுன், அதிகபட்சம் 5 மீட்டர்கள் வரை வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 24 மணி நேரத்திற்கான இதய துடிப்பு சென்சார் மற்றும் எஸ்பிஓ2 சென்சார், மன உளைச்சல் மற்றும் உறக்க முறைகள் பற்றிய விவரங்களை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த புதிய மாடலில் அதிகபட்சம் 150 ஸ்போர்ட்ஸ் மோட்கள், டூயல் பேண்ட் ஜிபிஎஸ் ஆண்டெனா, ஆறு செயற்கைக் கோள் சிஸ்டம்களை சார்ந்து ரூட் ஃபைல் இம்போர்ட் மற்றும் ரியல் டைம் நேவிகேசன் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இவை இன்பனைட் பிளாக் மற்றும் ரோஸ்பட் பின்க் வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் முன்பதிவு அமேசான் மற்றும் அமேஸ்பிட் இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது.

Spread the love