October 3, 2022

ஜனவரி-ஜூன் வரையிலான காலத்தில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு

புது தில்லி, செப்.6

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் ஆறு மாதங்களில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 9.69 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. இது குறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 9.69 கோடி கிலோவார இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அது 8.65 கோடி கிலோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டின் தேயிலையை மிகப் பெருமளவில் இறக்குமதி செய்யும் காமன்வெல்த் சுதந்திர நாடுகள் (சிஐஎஸ்) மதிப்பீட்டு மாதங்களில் தங்களது இறக்குமதியைக் குறைத்துள்ளன.

மேலும், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடைபெற்று வரும் போரின் எதிரொலியாக 2.10 கோடி கிலோவாக இருந்த அந்த நாடுகளுக்கான ஏற்றுமதி ஜூனுடன் நிறைவடைந்த 6 மாதங்களில் 2.06 கோடி கிலோவாகக் குறைந்துள்ளது. சிஐஎஸ் நாடுகளில் இந்தியத் தேயிலையின் முக்கிய இறக்குமதியாளராக ர´யா உள்ளது. அந்த நாட்டுக்கான தேயிலை ஏற்றுமதியும் மதிப்பீட்டு மாதங்களில் 1.59 கோடி கிலோவில் இருந்து 1.48 கோடி கிலோவாகக் குறைந்துள்ளது.

சிஐஎஸ் நாடுகளுக்கு அடுத்தபடியாக, இந்தியத் தேயிலையை அதிக அளவில் யுஏஇ இறக்குமதி செய்து வருகிறது. மேலும், மதிப்பீட்டு மாதங்களில் அந்த நாட்டுக்கான தேயிலை ஏற்றுமதி 67.6 லட்சம் கிலோவிலிருந்து 1.59 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியும் ஏற்றுமதியும் குறிப்பிட்ட காலகட்டத்தில் 1 கோடி கிலோவிலிருந்து 1.14 கோடி கிலாவாக அதிகரித்துள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Spread the love