September 27, 2022

ஜனவரியில் வர்த்தக வாகன விற்பனை
20.52 சதம் அதிகரிப்பு: எப்ஏடிஏ தகவல்

புது தில்லி, பிப்.8

கடந்த ஜனவரியில் வர்த்தக வாகன விற்பனை, 20.52 சதம் அதிகரித்துள்ளது என, வாகன முகவர்கள் சங்கமான எப்ஏடிஏ தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து எப்ஏடிஏ மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஜனவரியில், மாத பயணியர் வாகன விற்பனை, கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடும்போது, 10.12 சதம் அளவுக்கு சரிவைக் கண்டிருக்கிறது.செமிகண்டக்டர் சிப்’ கிடைப்பதில் உலகளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, பல நிறுவனங்களில் உற்பத்தி பாதிப்புக்குள்ளானது. இதனால் விற்பனையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் மூன்று சக்கர வாகன விற்பனையும் அதிகரித்துள்ளது. இருப்பினும், பயணியர் வாகன விற்பனை, கடந்த ஜனவரி மாதத்தில், 10 சதம் சரிவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் வாகனங்களுக்கான தேவை அதிகமாக இருந்த போதும், உற்பத்தி குறைவால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகன பிரிவில், விற்பனை 13.44 சதம் சரிந்துள்ளது. இதற்கு வாகனங்கள் விலை உயர்வு மற்றும் தொற்று பரவல் அதிகரிப்பு ஆகியவை காரணமாக அமைந்தது. டிராக்டர் விற்பனையும் 9.86 சத சரிவைக் கண்டுள்ளது. இருப்பினும், வர்த்தக வாகன விற்பனை 20.52 சதம் உயர்ந்துள்ளது. பொருளாதாரம் மீட்சி கண்டு வருவதை அடுத்து, வர்த்தக வாகன விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.மூன்று சக்கர வாகன விற்பனையும் 29.8 சதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love