December 9, 2022

சோழமண்டலம் ஃபைனான்´யல் நிகர லாபம் அதிகரிப்பு

சென்னை, நவ.11

சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த சோழமண்டலம் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இது குறித்து இந் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.22.23 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.21.42 கோடியாக இருந்தது. மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ.28.27 கோடியிலிருந்து ரூ.28.52 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love