January 22, 2023

சோனி புதிய பிரீமியம் வயர்லெஸ் ஸ்பீக்கர் இந்திய சந்தையில் அறிமுகம்

மும்பை, டிச.6

சோனி இந்தியா நிறுவனம் எஸ்ஆர்எஸ்-எக்ஸ்வி900 ப்ளூடூத் பார்டி ஸ்பீக்கரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

புதிய சோனி ஸ்பீக்கர் ஆம்னிடைரக்சல் பார்டி சவுண்அட் வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள எக்ஸ்-பேலன்ஸ்டு ஸ்பீக்கர் யூனிட்டின் வட்ட வடிவமில்லா ஸ்பீக்கர் பகுதி அதிக சவுண்ட் பிரெசர் மற்றும் குறைந்த டிஸ்டார்சன் வழங்குகிறது.

மேலும் இதில் உள்ள ஜெட் பாஸ் பூஸ்டர் ஆழமான மற்றும் சக்திவாய்ந்த பேஸ் அனுபவத்தை வழங்குகிறது. மேலும் சவுண்ட் பூஸ்டர் அம்சம் டிவி சவுண்ட்-ஐ மேம்படுத்துகிறது.

மேலும், இதில் பேட்டரி நீண்ட நேர பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்றி இருக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம். மேலும் பேட்டரி கேர் மோட் மூலம் ஓவர்சார்ஜிங் தவிர்க்கப்படும். இதன் மூலம் ஸ்பீக்கர் அதிக தரமுள்ளதாக நீடித்து உழைக்கும். மெகா பேஸ் அம்சம் ஸ்பீக்கரின் பேஸ்-ஐ பூஸ்ட் செய்து சக்திவாய்ந்த சவுண்ட் வழங்குகிறது.

ஸ்பீக்கரின் டாப் டச் பேனலில் அனைத்து அம்சங்களையும் இயக்கும் வசதியை வழங்குகிறது. இந்த சாதனத்தின் விலை ரூ. 79 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அனைத்து சோனி செண்டர்கள், முன்னணி மின்சாதன விற்பனையகங்கள், முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

Spread the love