October 3, 2022

செல்வமகள் சேமிப்பு திட்டம்: தமிழகம் 2-வது இடம்

சென்னை, பிப்.9

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 26.03 லட்சம் கணக்குகள் தொடங்கி தேசிய அளவில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக, சுகன்யா சம்ரிதி எனும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அஞ்சல் துறை செயல்படுத்தி வருகிறது. ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேரலாம். மேலும், குறைந்த சேமிப்புத் தொகை, அதிக வட்டி, கணக்கை முடிக்கும்போது 3 மடங்கு தொகை என பல்வேறு பலன்கள் உள்ளதால், ஏராளமானோர் இத்திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர்.

2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் 2021ம் ஆண்டு வரை நாடு முழுவதும் 1.42 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், 29.12 லட்சம் புதிய கணக்குகளை தொடங்கி உத்தரப்பிரதேச மாநிலம் முதல் இடத்திலும், 26.03 லட்சம் கணக்குகள் தொடங்கி தமிழகம்2-ம் இடத்திலும் உள்ளதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love